Samstag, 7. Juli 2007

கரை














தெளிவற்றுத் தெரியும்
திசைகள்!
குறைபாடு -
எந்தன் விழிகளிலா?
இல்லை
வெளிச்சம் குறைந்திருக்கும்
திசைகளிலா?
எதுவெனினும்
தொடரும் பயணம்
தொலைதூரம் தெரியும்
கரைசேரும் வரையேனும்.

-இந்துமகேஷ்