Mittwoch, 21. November 2007

வெளி














மோனப் பெருவெளி
நான்மட்டும் தனியனாய்...!

என் மூச்சின் ஓசைமட்டும்
எனக்குத் துணையாக!

இந்தப் பெருவெளிக்குள்
இருந்து வெளிப்பட்டு
எங்கோ பறக்கத் தவிக்கும்
இதயம்.

இதயமும் ஓர் வெளியாய்
என்னைத் தன்னுள்
இழுத்து அடக்கும்.

மறுபடியும்
மோனப் பெருவெளிக்குள்
நான்...

-இந்துமகேஷ்

0 Kommentare:

Kommentar veröffentlichen

Abonnieren Kommentare zum Post [Atom]

<< Startseite