Donnerstag, 6. November 2008

கதை!


















மெளனித்திருந்த
என் முகம் பார்த்து
ஒருபொழுது கேட்டாள்:
"ஏன் ஒன்றும்
சொல்லாமல்..?"

சொல்வதற்கு
என்ன இருக்கிறது
பிரிவதற்கான
நேரம் நெருங்கும்போது?

"நீ கதை!"

எனைச் சூழ்ந்த மெளனம்
அவளிடத்தும்.

எதுவும் பேசாமல்
அவளே ஆனாள்
கதை!


-இந்துமகேஷ்