Freitag, 29. Juni 2007

முதுமை















காலம் கனியக்
கனிந்து வரும்
அனுபவங்கள்
கோலம் வரையும்

கொடுங் கனவாய்க்
காட்சிதரும்
வாழ்வின் பொருளை
வகைப் படுத்தும்

முதுமை இது-
சாவுக்காய் அழைக்கும்
தருணமல்ல
வாழ்வின்
முழுமை!

-இந்துமகேஷ்

Mittwoch, 6. Juni 2007

துடிப்பு














இணையவலைக் கடற்பரப்பில்
சிறுபடகாய் என் இதயம்

முத்துக்கள் தேடி
மூச்சடக்கி மூழ்காமல்
அலைகள் நடக்கும்
அழகுதனை இரசிக்கின்றேன்

என் இதயப் படகு
எட்டுகின்ற தூரம்வரை
எழுத்துத் துடுப்பெடுத்து
எந்தன் பயணம்.

-இந்துமகேஷ்